速報APP / 圖書與參考資源 / வீரர் உலகம் (Veerar Ulagam)

வீரர் உலகம் (Veerar Ulagam)

價格:免費

更新日期:2019-09-16

檔案大小:6.5M

目前版本:1.3

版本需求:Android 4.4 以上版本

官方網站:mailto:bharanimultimedia@gmail.com

Email:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-veerar-ulagam.html

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖1)-速報App

தமிழில் சிறந்ததென்று போற்றப்பெறும் பொருள் இலக்கணத்தில் ஒரு பகுதி புறப்பொருள் இலக்கணம். புறப்பொருளின் இலக்கணத்தைச் சொல்லும் நூல் களும் இலக்கியமாக அமைந்த பனுவல்களும் தமிழில் பல உள்ளன. புறப்பொருள், பெரும்பாலும் வீரத்தின் பல்வேறு நிலைகளைச் சொல்வது. முடியாட்சியிருந்த பழங்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எவ்வாறு நடந்தன என்பதும், மன்னர்கள் படைகளைக் காப்பாற்றிப் பகை வர்களை வெல்வதற்கு என்ன என்ன வகையில் முயன்றனர் என்பதும் போன்ற பல செய்திகளை அந் நூல்கள் காட்டுகின்றன. அவற்றிலிருந்து தமிழ் மக்கள் உள்ளத்தே கனன்று பொங்கிய வீர உணர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

அகப் பொருள் இலக்கியங்கள் அத்தனையும் கற்பனைக் காட்சிகள் அடங்கியவை. ஆனால், புறப் பொருள் இலக்கியங்களாக வழங்கும் பழம் பாடல்களில் பெரும்பான்மையானவை வரலாற்றோடு சார்ந்த உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. சங்க காலத்து நூல்களாகிய புறநானூறு, பதிற்றுப் பத்து என்பவற்றிலுள்ள பாடல்களையும் அவற்றிற்குப் பின்னுள்ள குறிப்புக்களையும் பார்த்தால் இவ்வுண்மை புலனாகும்.

தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொள்ளப் பயன் படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கோவைப்படுத்தி எழுதியதே இந்தப் புத்தகம்.

ஆசிரியர் குறிப்பு: கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖2)-速報App

உள்ளடக்கம்:

முன்னுரை

1. எல்லையில் போர்

2. நிரை மீட்கும் போர்

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖3)-速報App

3. நாடு கொள்ளும் போர்

4. சிறந்த வீரம்

5. போருக்கு எதிரே போர்

6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖4)-速報App

7. மதில் முற்றுகை

8. முற்றுகை வெற்றி

9. மதில் காவல் போர்

10. போர்க்களத்தில்

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖5)-速報App

11. வெற்றி மாலை

12. ஞானமும் தவமும்

13. பாசறையில்

14. வாகையின் வகை

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖6)-速報App

15. அரசன் புகழ்

16. ஆற்றுப்படை

17. வீர வழிபாடு

பின்னுரை

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖7)-速報App

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

வீரர் உலகம் (Veerar Ulagam)(圖8)-速報App